கேரளத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளுடன் அரசு மருத்துவர் கைது
மத்திய கேரளத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருப்பதாக அரசு மருத்துவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோழிகோடு பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் அகில் முகமது உசேன். இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடத்தப்பட்டது.
மருத்துவக் கல்லூரியை ஒட்டியுள்ள விடுதியில் சோதனை நடத்தியபோது அரசு மருத்துவர் ஒருவர் 2.78 கிராம் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதில், மேலும் சில மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளதால் காவல்துறையினர் மற்ற விவரங்களை வெளியிடவில்லை.
கைது செய்யப்பட்ட மருத்துவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.