நாடாளுமன்றத்தில் 4 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி.
நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற ஊழியர், ஊடகவியலாளர், நடனக் குழுவின் கலைஞர் உள்ளடங்களாக நால்வருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று ஆரம்பமான நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே நால்வருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று நாடாளுமன்றத்தில், ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.