விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதம் : திமுகவினர் போராட்டம்

விழுப்புரம் காமராஜார் சாலையில் இருந்த தந்தை பெரியார் சிலை மீது கனரக லாரி மோதியதில் சிலை முழுவதுமாக சேதமடைந்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காமராஜார் சாலை. இந்த சாலையில் தலைமை தபால்நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சிலை நிறுவப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அரசியல் கட்சி பிரமூகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டபாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டையர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்ட்ர மாநிலம் புனே நோக்கி சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலைக்கு சென்றுள்ளது வழி தவறி வந்ததை உனர்ந்த ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றுள்ளார், குறுகிய சாலை என்பதாலும் நீண்ட கனரக லாரி என்பதால் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியது இதில் தந்தை பெரியாரின் முழு உருவ சிலை உடைந்து கீழே விழுந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் லாரியை காவல்நிலையம் எடுத்து சென்றனர். மேலும், லாரி ஓட்டுனர் மச்சேந்திர ஷ்பலி என்பவரை கைது செய்துள்ளனர். பெரியார் சிலை சேதமடைந்ததை அறிந்த திமுகவினர் சிலையை இடித்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விழுப்புரம் நகர காவல்நிலையம் முன்பு அமர்ந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், நாங்கு முனை சந்திப்பிலும் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தந்ததை பெரியாரின் சிலை லாரி மோதி சேதமடைந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.