உபி தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ப்ரியங்கா காந்தி?
ஐந்து மாநில தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது அம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ்,பகுஜன் சமாஜ் கட்சி என நான்கு பெரும் கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் முதல்வர் வேட்பாளர்களாக எவரும் களமிரங்கவில்லை என்ற நிலைதான் இருந்தது. பின்னர் பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற நிலையில் அகிலேஷ் யாதவும் போட்டியிடும் சூழல் உருவானது. இப்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ப்ரியங்கா காந்தி களமிரங்குவார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
கட்சியில் பெருமளவு பெண்களும் , ஆண்களும் களமிரக்கப்படுவதால் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் பாஜக, சமாஜ்வாதி கட்சிகளை மீறி அது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் இந்தமுறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை நம்பி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. போட்டியிடுகிறவர்களின் பெரும்பான்மையோ ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
சாதிவாரியாக பிரியும் உயர்சாதி மற்றும் பிற்படுத்தபப்ட்ட, முஸ்லீம், தலித் வாக்குகளை காங்கிரஸ் கவருமா என்பது சந்தேகம்தான் ஆனால். கடந்த காலங்களை விட கட்சியை வளர்த்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை உதவும்.