பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 கோடியை தாண்டியது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,00,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,60,01,498 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 233 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,00,63,579 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 58,09,572 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.