டயானாவுக்கு மண்டைக்குள் பிரச்சனையா? : மைத்திரி கடுப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்னை சிறையில் அடைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் சிறையில் அடைக்கப்படுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“என்னை சிறையில் அடைப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அது பொய். எந்த ஆதாரமும் இல்லை. ”
“ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதியே முதலில் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் காலத்தை குறைத்துக் கொண்ட ஒருவன். பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பேசுவது அவரது கருத்து. அவருக்கு தலையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. ”
“மற்றவர்களிடம் இருந்து உண்ணும் தேசமாக நாம் மாறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே எமது உணவை நாமே தயார் செய்ய வேண்டும். ” என்றார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.