நீர்ப் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்த பெண் குழந்தை பரிதாப மரணம்!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி சமுத்திரபுரம் பகுதியில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சர்மிலன் கனிஸ்ரிகா (03 வயது) என்ற சிறுமியே பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஜம்பு பழத்திலிருந்த எறும்புகளை கழுவ முற்பட்டு சிறுமி பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுமியின் உடலில் வேறு காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றிருந்தன.