வேகமாகப் பரவி வரும் டெங்கு! – 6,896 பேர் பாதிப்பு.
இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நேற்று வரையான 26 நாட்களில் 6 ஆயிரத்து 896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.
மக்கள் தமது சுற்றுச்சூழலை டெங்கு நோய் பரவாத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.