கிளிநொச்சி மாவட்ட உயர் அதிகாரிகளுடன் நீதி அமைச்சர் விசேட கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதி அமைச்சரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடலானது இடம்பெற்றது.
இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் பாவனைக்கு விடுவிக்கப்படாத காணிகள், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை அபிவிருத்தி செயற்திட்டங்களிற்காக விடுவிப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வு,போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை,வாள்வெட்டு,குழுமோதல்கள் போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
போதைப் பொருள் பாவனையுடன் சம்மந்தப்படுகின்ற சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கு கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்களின் மேற்பார்வையுடனான புனர்வாழ்வு மையத்தை உருவாக்குவதற்கு இக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.