பஸ்-முச்சக்கர வண்டி விபத்து: இருவர் பலி.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் வரக்காபொல துல்ஹிரிய ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் இன்று (01) அனுராதபுரம் டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் களுத்துறை, பேருவளை, சீனன்கோட்டை கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்துள்ளதுடன், ஏனைய நால்வரும் படுகாயமடைந்து வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நால்வரும் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி தூங்கியதால் எதிர் பாதையில் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.