திமுக வட்ட செயலாளர் கொலை – திணறும் தனிப்படை போலீசார்
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் 188-வது தி.மு.க வட்ட செயலாளர் பதவியில் இருப்பவர் செல்வம் ( வயது 45). இவர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் 188-வது வட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு திமுக சார்பில் மனு போட்டுள்ளார். இவருடைய அலுவலகம் ராஜாஜி நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று ராஜாஜி சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது அலுவலகம் உள்ள ராஜாஜி தெருவில் இருந்து சுமார் 10 மீட்டர் அருகில் உள்ள ராமச்சந்திரா தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
இந்நிலயில் இரவு 9 மணிக்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் முதல் 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கமிஷனரின் தனிப்படை, பரங்கிமலை துணை ஆணையர் தனிப்படை, மடிப்பாக்கம் உதவி ஆணையர் தனிப்படை, மடிப்பாக்கம் ஆய்வாளர் தனிப்படை, ஆதம்பாக்கம் ஆய்வாளர் தனிப்படை, பழவந்தாங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தனிப்படை என 6 தனிப்படையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நடைபெற்ற கொலை என்பதால் தேர்தலுக்கான கொலையா? இல்லை தொழில் ரீதியான கொலையா? என்பதை உறுதி செய்ய முடியாமல் தனிப்படை போலீசார் தினறி வருகின்றனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தடயமும் கிடைக்காததால் தனிப்படையினருக்கு இந்த வழக்கு ஒரு சவாலாகவே உள்ளது.