யாழ் வாக்கெண்ணும் நிலையத்தில் கூச்சல் குழப்பம் தடியடி

யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதால்
கட்சிகளின் ஆதரவாளர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தில் குழுமியிருந்த ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை வெளியிடுமாறு கூச்சலிட்டனர்.

சம்ப இடத்திற்கு விரைந்த பொலிஸார் கூச்சலிட்ட ஆதரவாளர்களை வாக்கெண்ணும் நிலைய வழாகத்திற்கு வெளியில் இழுத்துச் சென்றனர்.

இதனிடையே ஐந்து தொகுதிகளில் மீள வாக்கெண்ணுவதற்கு  சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலின் யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகள் தொகுதிவாரியாக வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஐந்து தொகுதிகளில் வாக்குகளை மீள எண்ணுமாறு கோரியுள்ளார்.

வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒரே ஒரு பெண் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ் அழுதவாறு வெளியேறினார்.

வாக்கெண்ணும் நிலையத்திற்குள் எம்.ஏ.சுமந்திரன் வருகைததந்தபோது அங்கு குழுமி நின்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் விசேட அதிரடிப்படையினர் தடியடி நடத்தினர்.

யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள மத்திய வாக்கெண்ணும் நிலையத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் வருகை தந்தபோது அங்கு குழுமியிருந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடியடியினை மேற்கொண்டனர்.

யாழ் தேர்தல் மாவட்டத்தினுடைய கட்சிகளின் மொத்த வாக்குகளின் விபரங்கள் கீழ்வருமாறு

இலங்கை தமிழரசுக் கட்சி 112967
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55303
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 49373
ஈழமக்கள் ஜனநாயக கட்சி 45797
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 35927
ஐக்கிய மக்கள் சக்தி 13,564
ஐக்கிய தேசியக் கட்சி (எத்தனை என தெரியவில்லை)

மொத்த வாக்குகள் 394136
செல்லுபடியான வாக்குகள் 359130
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 35006

யாழ் தேர்தல் மாவட்ட கிளிநொச்சி தொகுதி தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி 31156
சுயேச்சை குழு 5 – 13339
ஐக்கிய மக்கள் சக்தி 3850
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2361
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1830
தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி 1827

மொத்த வாக்குகள் 65988
செல்லுபடியான வாக்குகள் 6649
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6649

படங்கள் மற்றும் வீடியோ

செய்தி: டிலக்சன்

Comments are closed.