மனிதன் வாழும்போதே வாழ்த்தப்பட வேண்டும்.
நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்து புத்தாக்கத் துறையிலும் சமூகப் பணிகளிலும் உயர்ந்து நிற்கும் மனிதர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதி உயர் விருதான தேசமானிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தொழிலதிபர் டி. எஸ். எம். நவாஸ் அவர்களின் 50 வருட சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு குருநாகல் படகமவில் அமைந்துள்ள ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் மற்றும் அவரது பாரியார் பெரோஸா முஸம்மில் கலந்து கொண்டனர்.
இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார். குருநாகல் நகரில் உள்ள சிங்கள, முஸ்லிம், தமிழ் வர்த்தக சங்கப் பிரமுகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)