நியூசிலாந்துக்கு எதிரான டி.20 போட்டி இந்திய மகளிர் அணி தோல்வி.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடர் மார்ச் 4ம் தேதி முதல் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் நியூசிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி அந்த அணியுடன் ஒரு டி.20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இதில் ஒரே ஒரு டி.20 போட்டி இன்று காலை நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155ரன் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா 13, யாஸ்திகா பாட்டியா 26, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக சப்பினேனி மேகனா 37 ரன் (30பந்து) எடுத்தார். 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுத்த இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக 5 போட்டி கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் 12ம்தேதி நடக்கிறது.