இருவருக்கிடையில் முறுகல்; ஒருவர் வெட்டிப் படுகொலை.
இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, குருவிட்ட, பொரலுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொரலு, ஏரத்ன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.