புல்வாமா நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கடந்த 2019ஆம் ஆண்டு பலியான ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 பிப். 14ஆம் தேதி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.

நாடு முழுவதும் உயிரிழந்த வீரர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“2019ஆம் ஆண்டு புல்வாமாவில் வீரமரணமடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூர்கிறேன்.

அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.”

Leave A Reply

Your email address will not be published.