புதுக்குடியிருப்பு பகுதியில் விபரீத முடிவால் இளைஞன் உயிரிழப்பு !
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் ஆண் ஒருவரின் தவறான முடிவினால் உயிரிழந்துள்ளார்,
இச்சம்பவம் அக் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் பாடசாலைக்கு அருகில் வசித்து வரும் உதயகுமார் பிரசாந் வயது 32 என்ற ஆண் தனது வீட்டில் விபரீத முடிவால் 15.02.2022 உடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள், சடலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.