உக்ரைன் எல்லையில் போர் விமானங்களை குவித்து வரும் ரஷியா..
உக்ரைன் நாட்டு எல்லையை ஒட்டி ரஷியா தனது போர் விமானங்களை குவித்து வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதி அருகாமையில் போர் விமானங்களை குவித்துள்ளதாக இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.
ரஷியாவின் போர் படைகள் உக்ரைனுக்கு அருகாமையில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷிய பகுதிகளில் திரட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
ரஷியா தனது ராணுவ படைகளை உக்ரைன் எல்லையிலிருந்து விலக்கி வருவதாக தெரிவித்துள்ள நிலையில், மேலும் அதிகமாக உக்ரைன் எல்லையில் ரஷிய படைகள் குவிக்கப்பட்டு வருவது தற்போது ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையை ஒட்டிய வெவ்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என உக்ரன் உறுதியளித்தால் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்து வரும் ரஷியா, 2014ம் ஆண்டு உக்ரைன் வசம் இருந்த கிரைமியா பகுதியை பிரிவினைவாதிகள் மூலம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.