நடன இயக்குனராக பிரபு தேவா வாங்கும் சம்பளம்.. அதுவும் வடிவேலு படத்திற்காக….
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. ஆம், இயக்கம், நடன இயக்குனர், நடிகர் என பல வகையில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் கைவசம் இருந்தாலும்,நடன இயக்குனராக ஓரிரு படங்களில் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனுஷுடன் இவர் மாரி 2 படத்தில் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு இவர் நடன இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.
அந்த வகையில் தற்போது வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் Returns படத்தில் வடிவேலு நடனம் ஆடும் பாடலுக்கு, பிரபு தேவா தான் நடன இயக்குனராம்.
இந்த பாடலுக்கு நடனம் அமைக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் பிரபு தேவா.
பல ஆண்டுகளுக்கு முன்பு காதலன் படத்தில் வடிவேலு மற்றும் பிரபு தேவா இருவரும் இணைந்து நடனம் ஆடியதை ரசிகர்கள் இதுவரை மறக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.