கச்சதீவு திருவிழாவுக்கு 100 பக்தர்களுக்கு அனுமதி!
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது.
ஏலவே, குறித்த திருவிழாவுக்கு 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ். மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், யாத்திரிகர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை எனவும், அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்த உத்தரவை அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தற்போது, இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தலா 50 யாத்திரிகர்களுக்கு மாத்திரம் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறினார்.