நான் ஜெயிச்சா என் சமூகத்துக்கே பெருமை! திமுக சார்பாக போட்டியிட்ட திருநங்கை கங்கா அமோக வெற்றி

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட திருநங்கை கங்கா அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 19 ஆம் திகதி அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவானது எனன மாநில தேர்தல் அறிவித்திருந்தது.

அதாவது தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் இன்று (பிப்ரவரி 22) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல வார்டுகளில் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா தற்போது வெற்றி பெற்றுள்ளார். வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் திமுக வேட்பாளராக கங்கா போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் கங்கா தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில் வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் ஆரத் தழுவி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.