பிச்சைக்கார நிலைமையில் இலங்கை; பதில் சொல்லுமா ராஜபக்ச குடும்பம்?
“இலங்கை தற்போது அடைந்துள்ள பிச்சைக்கார நிலைமை சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகிய ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எரிபொருள் ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை இறக்குவதற்கு 36 மில்லியன் டொலர் இல்லை என்பதால், வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“36 மில்லியன் டொலர் இல்லாத காரணத்தால், நாட்டு மக்களின் போக்குவரத்து மாத்திரமல்லாது மின்சாரத்தை அரசு இல்லாமல் ஆக்கியுள்ளது.
மின்சார நெருக்கடி உட்பட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு பாறையைப் பறித்த பூனையின் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது” – என்றார்.