விழுங்கவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை! இக்கட்டான நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடு சீனா.
சீனாவின் சில பொது வங்கிகள் ரஷ்யாவிலிருந்து இயற்கை வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிதியாதரவு வழங்குவதைக் கட்டுப்படுத்துகிறது.
சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமான நட்பு நாடுகள். இருப்பினும் சீன வங்கிகள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆதரவு வழங்கினால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சீனாவின்மீது கடுமையான தடைகள் விதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யா உக்ரேன்மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சீனாவின் ஆகப்பெரிய வங்கிகளான ICBC, Bank of China ஆகியவை அத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தன.
சொத்துரீதியாக ICBC வங்கி உலகின் ஆகப்பெரிய வங்கியாக விளங்குகிறது. Bank of China, நாணய வர்த்தகப் பிரிவில் சீனாவின் ஆகப்பெரிய வர்த்தக வங்கியாக விளங்குகிறது.
இருப்பினும் ரஷ்யா-உக்ரேன் விவகாரத்தில் சீனா மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
அதன் நட்பு நாடான ரஷ்யாவை நேரடியாகவும் எதிர்க்க முடியவில்லை… ரஷ்யா உக்ரேனைத் தாக்கியதை ஆதரிக்கவும் முடியவில்லை.