ரஷ்யா – உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரூஸின் கோமெல் பகுதியில் தொடங்கியது
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை பெலாரூஸின் கோமெல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்த ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை பெலருஸ் எல்லையில் ஆரம்பித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவையே அதன் முக்கிய இலக்கு என்று கூறியுள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி, ஒவ்வொரு மணிநேர மோதலும் உக்ரேனிய வீரர்களிடையே புதிய உயிரிழப்புகளை கொண்டு வருவதால், கூடிய விரைவில் எந்த ஒப்பந்தத்தையும் எட்டுவதில் நாங்கள் நிச்சயமாக ஆர்வமாக உள்ளோம்.
ஆனால் அந்த ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய வீரர்களை தங்கள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
எவ்வாறெனினும் இந்த பேச்சுவார்த்தையின் இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தொடர்கின்றது.