பேராயர் மெல்கம் , மிச்செல் பச்லெட்டை சந்தித்தார்
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று காலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்தார்.
சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் பேராயர், பேராயர் செயலாளர் மற்றும் உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆதரவைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.