அமைச்சர் பதவிகளில் இருந்து விமல் மற்றும் கம்மன்பில நீக்கம்

அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (02) 11 அரசாங்கப் பங்காளிகள் பங்குபற்றிய அகில நாட்டு உரிமை மாநாட்டில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நிதி அமைச்சரை கடுமையாக விமர்சித்ததை அடுத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.

அவர்களுக்கு பதிலாக , காமினி லொகுகே புதிய எரிசக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.