‘மொட்டு’ அரசில் மேலும் இருவருக்கு ஆப்பு!
அரச பங்காளிக் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமரத்ன மற்றும் பிரேம்நாத் சி. தொலவத்த எம்.பி. ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதேவேளை, ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த அறிவித்துள்ளார்.
அழைப்பையேற்றே தான் கூட்டத்துக்குச் சென்றார் எனவும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.