இராணுவ தளபதியை சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள்
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி ரைவிஸ் கொஸ், இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த நல்லுறவு கலந்துரையாடலில் இரு நாடுகளிடையே மேம்படுத்த வேண்டி முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் மற்றும் பங்குதாரர்களின் பங்களிப்பை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி பாராட்டினார்.
இந் நல்லெண்ண சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றி கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.