மேரியொபோல் நகரம் ரஷ்ய படையெடுப்பில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
மேரியோபோல் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தப்பிக்கும் நம்பிக்கையைக் கொடுத்த, திட்டமிட்ட வெளியேற்றத்தை ரத்து செய்ய வைத்தது.
இந்த நகரம் பல நாட்களாகக் கடும் தீயில் சிக்கியுள்ளது. ஆனால், இது ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது?
இது கருங்கடலில் யுக்ரேனின் மிகப்பெரிய துறைமுகங்களில் இன்று. மேலும் க்ரீமியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாதையில் இருக்கும் ஒரு முக்கிய நகரம்.
ரஷ்யா மேரியோபோலைக் கைப்பற்றினால், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் லூஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகியவற்றை க்ரீமியாவோடு இணைக்கும் ஒரு பாதையின் கட்டுப்பாட்டைக் கைக்கொள்ள முடியும்.