17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி ரஷியா அதிரடி.
உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷியா நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இத்தகைய நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.