ஜனாதிபதி கோட்டாபயவின் ‘வியத்மக’ அமைப்பிலிருந்து 10 பேர் நாடாளுமன்றத்துக்கு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘வியத்மக’ அமைப்பிலிருந்து 10 பேர் இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘வியத்மக’ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பின் ஊடாக அவர் ஜனாதிபதி வேட்பாளராவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றார்.
இதற்கமைய நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட்டதுடன் அவர்களில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் இரண்டு பேர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
1) சரத் வீரசேகார – கொழும்பு மாவட்டம்
2) கலாநிதி நாலக கொடஹேவா – கம்பஹா மாவட்டம்
3) நாலக கோட்டே கொட – மாத்தளை மாவட்டம்
4) கலாநிதி சன்ன ஜயசுமன – அநுராதபுர மாவட்டம்
5) பேராசிரியர் குணபால ரத்னசேகர – குருநாகல் மாவட்டம்
6) சட்டத்தரணி உதய கிரிந்திகொட – கண்டி மாவட்டம்
7) வைத்தியர் உபுல் கலப்பதி – அம்பாந்தோட்டை மாவட்டம்
8) திலக் ராஜபக்ஷ – திகாமடுலை மாவட்டம்
9) அஜித் நிவாட் கப்ரால் – தேசியப் பட்டியல்
10) சீதா அரம்பேபொல – தேசியப் பட்டில்
Comments are closed.