கொட்டாஞ்சேனையில் காருக்குள் சடலம்!

காருக்குள் இருந்து ஒருவர் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுப் பிற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு கொட்டாஞ்சேனை, அலுத்மாவத்தை பிரதேசத்தில் கார் ஒன்றுக்குள் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காருக்குள் உயிரிழந்த நபர் அதுருகிரிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என்றும், கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.