எம்.பி. பதவியை இழப்பாரா சுரேன்?

எம்.பி. பதவியை
இழப்பாரா சுரேன்?

– இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில்
தேர்தல் ஆணைக்குவில் முறைப்பாடு

இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது எனத் தமக்குக் கிடைத்த தகவலின் பிரகாரமே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என முறைப்பாட்டைப் பதிவு செய்த சிவில் அமைப்பு உறுப்பினர் அளுத்கம இந்திர ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் எனத் தாம் நம்புகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுரேன் ராகவனுக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்ட விதம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் ரோஹண லக்rமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

சுரேன் ராகவனுக்கு தேசிய பட்டியல் வழங்கப்படுகின்றமை குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடமோ அல்லது வேறு உறுப்பினர்களிடமோ வினவப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.