அரச பாடசாலை குடிநீர் கட்டணம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு…
அரச பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது, இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசாங்கம் நிதி வழங்காது என அனைத்து பாடசாலைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாடசாலை குடிநீர் கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டியுள்ளதால் கடும் பிரச்னை ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.