ஓவர் டேக் பஞ்சாயத்து.. சாலையில் மோதிக்கொண்ட பஸ் டிரைவர்கள் – பயணிகள் அவதி
கோவில்பட்டி அருகே யார் முதலில் பயணிகளை ஏற்றுவது என்ற பிரச்சினையில் தனியார் பஸ் ஊழியர்கள் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2 தனியார் பஸ்கள் 5 நிமிட இடைவெளியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியுள்ளது. முதலில் கிளம்பிய தனியார் பஸ்சினை, 2வதாக கிளம்பிய தனியார் பஸ் முந்தி கொண்டு, எட்டயபுரம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றிக் கொண்டு இருந்தாக தெரிகிறது. அதனை தொடர்ந்து வந்த, முதலில் புறப்பட்ட தனியார் பஸ்சின் டிரைவரை, பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அந்த தனியார் பஸ்சை மறித்து நிறுத்தினார். தங்களுக்கான நேரத்தில் எப்படி முந்தி செல்லாம் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து 2 பஸ்களின் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது முற்றியதில் இருதரப்பினரும். ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், அந்த 2 பஸ்களில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு விட்டு ஓட்டுனர்கள், நடத்துனர்களை பின்னர் போலீஸ் நிலையத்தில் இரு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இனிமேல், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை சரியாக இயக்க வேண்டும். பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டு, வேறு பிரச்னைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த 2 தனியார் பஸ்களும் கால் மணி நேரம் தாமதமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற பிரச்சினை இந்த பஸ்நிலையத்தில் அடிக்கடி நடப்பதாகவும், இனிமேல் இப்பிரச்னை நடக்காதவாறு போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.