இந்தியாவிடம் இருந்து $1 பில்லியன் கடன் : ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று பிற்பகல் கையெழுத்தானது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே அது இடம்பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளரும், இலங்கை சார்பாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் கையொப்பமிட்டுள்ளனர்.
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கோதுமை மா, சீனி, அரிசி மற்றும் இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.