அடுத்த மூன்று மாத காலத்துக்குள் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
இதன்படி 25 வீதத்தால் பஸ் கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக் கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
வருடாந்த பஸ் கட்டண மீளாய்வின் அடிப்படையிலேயே இந்தக் கட்டண உயர்வு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து சில நாட்களுக்கு முன்னரே பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.