பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா டாடா என்று தற்போது இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு சம்பளம், மருத்துவ வசதி உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் நாடு முழுவதும் புதுமையான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தாங்கள் எந்த டூல்ஸ்சும், அதாவது கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் பணி செய்வது என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னை விமான நிலையத்திலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் விமான நிலையத்தில் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், சம்பள உயர்வு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்கள் அதே போல் சென்னைக்கு வந்து சேர வேண்டிய எந்த ஏர் இந்தியா விமானங்கள் இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் இயங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.