கோட்டா தலைமையில் நாளை விசேட கூட்டம்! ஆளுங்கட்சியினருக்குக் கட்டாய அழைப்பு.
ஆளுங்கட்சியின் விசேட கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரப் பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் எனத் தெரியவருகின்றது.
அமைச்சர்கள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம் நாளைமறுதினம் நடைபெறவுள்ள நிலையிலேயே, ஆளுங்கட்சியினரை ஜனாதிபதி சந்திக்கின்றார்.