ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இன்று விநியோகிக்க நடவடிக்கை.

நேற்று முன்தினம் இரவு நாட்டை வந்தடைந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்கி விநியோகிக்கும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம் சுமார் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாளையும், நாளை மறுதினமும், மேலும் 7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எவ்வாறிருப்பினும், நாட்டின் பல பாகங்களிலும், நேற்றைய தினமும், சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.