ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என கைப்பற்றியது .3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியினால் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் , இந்த தொடரில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டது .இந்திய அணி இந்த பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.