கோட்டா அரசு – கூட்டமைப்பு பேச்சு தொடர வேண்டும்! – அமெரிக்காவின் விருப்பம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பை அமெரிக்கா வரவேற்கின்றது. இந்தச் சந்திப்புத் தொடர வேண்டும் என்று ஊக்குவிக்கின்றது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.