தேசியப் பட்டியல் விவகாரம் ஐ.ம.சக்திக்குள்ளும் குழப்பம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் சம்மந்தமாக இதுவரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. இவ்வார இறுதிக்குள் தேசியப் பட்டியல் தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நம்புகின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத் தலைவருவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

ரணில் விக்கிரமசிங்கவின் விட்டுக் கொடுக்காத மனப்பாங்கினாலேயே ஐக்கிய தேசியக் கட்சி  தோல்வியைத் தழுவியது. பழமையான கட்சியாகிய ஐ.தே.க எந்தவிதமான ஆசனங்களையும் பெறவில்லை.ரணிலின் பிடிவாதமே கட்சியினை இந்த நிலைக்குக் தள்ளியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் ஒன்று ஏற்படுமானால் அது ஆரோக்கியமானதாக அமையும். எனிவரும் காலங்களில் ஐ.தே.காவோடு இணைந்து செயற்படும் எண்ணம் எமக்கில்லை.தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடனே பயணிப்போம் என்றார்.

Comments are closed.