இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு உகந்த சந்தர்ப்பம் அல்ல! ரணில் சுட்டிக்காட்டு.
“அரசுக்கு எதிராக நியாயமான விடயங்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமானால் அது பற்றி சாதகமாகப் பரிசீலிக்கலாம்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எனினும், உள்நோக்கம் இருக்குமானால் அதனை ஏற்கமுடியாது. அதேபோல் இனவாத ரீதியிலான அரசியலையும் நாம் நிராகரிப்போம் என்றும் ரணில் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலை ஆட்சி மாற்றத்துக்கு உகந்த தருணம் அல்ல எனவும், நாட்டை மீட்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு தாம் எடுத்த முடிவில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் மேலும் கூறினார்.