மருத்துவர்கள் ஹிபோகிரடிக் உறுதிமொழியே எடுத்துக் கொள்வர் – மத்திய அரசு உறுதி
மருத்துவர்கள் ‘ஹிபகிரடிக்’ உறுதிமொழியே எடுத்துக் கொள்வார்கள் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் ஹிபகிரடிக் உறுதிமொழியை மாற்றி சித்த மருத்துவர் பெயரில் சரக சபத் உறுதிமொழியை அறிமுகப்படுத்தவுள்ளதா என்றும் இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்திடம் ஆலோசிக்கப்பட்டதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் கேத்கர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பவர் தேசிய மருத்துவ ஆணையம் கூறியது போல உறுதிமொழியை மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்தார். மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்து மருத்துவராக தங்கள் பணியை தொடங்கும் முன் உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கிரேக்க மருத்துவர் ஹிபோகிரடிஸ் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொள்வர். அதனை மாற்றி சித்த மருத்துவர் சரக மஹரிஷி பெயரில் உறுதிமொழி எடுக்க சொல்ல போவதாக தகவல்கள் பரவின. இதற்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.