கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
கொவிட் தொற்று நோயாளர்கள் 27 பேர் இன்று காலை வரையில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த 27 பேரில் 23 பேர் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் ஆவர். ஏனைய 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த பின்னர் தியத்தலாவ இராணுவ வைத்தியசாலை, முதலாவது கெமுணு படையணி மற்றும் ஈடன் றிசோட் ஆகிய தினிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் என தெரிவிகப்பட்டது.
இதற்கமைவாக நேற்று காலை அளவில் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புபட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 629 ஆகும்.
Comments are closed.