மக்கள் எதிரிகள் இல்லை- குமார் சங்கக்கார.
இலங்கைமக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர்,நாளாந்த வாழ்க்கையை கொண்;டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது.
ஓவ்வொரு நாளும் முந்தைய நாளை விட கடினமானதாக காணப்படுகின்றது.
மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி என்னதேவையோ அதனை கேட்கின்றனர்- ஒரு தீர்வு.
சிலர் தங்கள் குரல் வெளிப்படுவதற்காக மனக்கசப்பு மற்றும் சீற்றத்துடன் செயற்படும் அதேவேளை ஏனையவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர்.
மக்களை செவிமடுப்பதும்,அழிவை ஏற்படு;த்தும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரல்களை ஒதுக்கிவைப்பதும்,நாட்டின் சிறந்த நலனை கருத்தில்கொண்டு செயற்படுவதுமே சரியான தீர்வாகும்.
மக்கள் எதிரிகள் இல்லை, இலங்கை என்பது அதன் மக்கள் நேரம்வேகமாக ஒடுகின்றது மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் வழங்கவேண்டும்.