மஹ்முது ஹசன் அசத்தல் சதம் – வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 298 ஓட்டங்கள்.
வங்காள தேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பவுமா 93 ரன்னும்,எல்கர் 67 ரன்னும், சரல் எர்வீ 41 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் காலித் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், எபாட் ஹொசைன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 2-ம் நாள் முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முது ஹசன் ஜாய் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மஹ்முது ஹசன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு லிட்டன் தாஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். லிட்டன் தாஸ் 41 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ், மஹ்முத் ஹசன் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 82 ரன்கல் சேர்த்தது.
இறுதியில், வங்காளதேசம் அணி 115.5 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மஹ்முது ஹசன் 137 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர் 4 விக்கெட், வில்லியம்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.