அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறுகிறது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று முவு செய்துள்ளது.
பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் பதினான்கு (14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதன்படி நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.