பருத்தித்துறையில் 294 கிலோ கஞ்சா மீட்பு
பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த நிலையில் 294 கிலோ கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று அதிகாலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான பொதிகள் கடலில் மிதந்து வந்ததை அவதானித்துள்ளனர்.
இதன்போது பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டபோது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது.
Comments are closed.